இன்றைய பிறந்தநாள்

சாமுவேல் கோம்பர்ஸ் – 27-01-2025

சாமுவேல் கோம்பர்ஸ்
🏆 அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🏆 1881ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை (Federation of Organized Trades and Labor Unions) உருவாக்க உதவியாக இருந்தார்.

🏆 1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labor) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

🏆 தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும் பாடுபட்டார். 1919ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார்.

🏆 சமூக மக்கள் அனைவருக்கும் இயற்கை வளங்களும், வாய்ப்புகளும் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 1924ஆம் ஆண்டு மறைந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *