இன்றைய பிறந்தநாள்
லூயிஸ் கரோல்
உலகப் புகழ்பெற்ற ‘Alice in Wonderland’ குழந்தைகள் நாவலைப் படைத்த லூயிஸ் கரோல் 1832ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன்.
இவர் ‘Through the Looking-Glass, and What Alice Found There’ என்ற 2-வது பகுதியை எழுதினார். இவை இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான குழந்தைகள் நூல்களாகக் கொண்டாடப்பட்டன.
மேலும் இவர் கணிதப் பேராசிரியர், கவிஞர், புகைப்படக் கலைஞர் என்று பலவிதமாக அறியப்பட்டாலும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் என்று கூறப்படுவதையே அதிகம் விரும்பினார்.
குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் தனது 1898ஆம் ஆண்டு மறைந்தார்.
