ஒருவன் தன்னுடைய தொழிலில்படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் …